/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் போலி பத்திரப்பதிவு சார் பதிவாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு

ADDED : செப் 11, 2025 10:52 PM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.97.50 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலியாக பத்திரப் பதிவு செய்து மோசடி செய்த சார் பதிவாளர் உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அழகப்பன் 76. இவருக்கு காரைக்குடியில் ரூ.97.50 லட்சம் மதிப்பில் வீடு, நிலம் உள்ளது. ஆள்மாறாட்டம் செய்து போலி பட்டா பெற்று, மோசடியாக போலி ஆவணங்கள் தயார் செய்து, கிரையப்பத்திரம் பதிவு செய்த காரைக்குடி கழனிவாசல் முத்துராமலிங்கம், தெற்கு தெரு மெய்யப்பன், பலவான்குடி வைரவன், கணேசபுரம் சரவணக்குமார், செல்வக்குமார், ஓ.சிறுவயல் கலைச்செல்வன், காரைக்குடி ரவிக்குமார், காரைக்குடி சார்பதிவாளர் எண் - 2 காங்கிரேஷ் ஆகிய 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க அழகப்பன் சிவகங்கை நீதித்துறை நடுவர் எண் 2ல் மனு தாக்கல் செய்தார். விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். சி வகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சார்பதிவாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்தனர்.