/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ., நிர்வாகி கொலையில் 9 பேர் மீது வழக்கு: 4 பேர் கைது
/
பா.ஜ., நிர்வாகி கொலையில் 9 பேர் மீது வழக்கு: 4 பேர் கைது
பா.ஜ., நிர்வாகி கொலையில் 9 பேர் மீது வழக்கு: 4 பேர் கைது
பா.ஜ., நிர்வாகி கொலையில் 9 பேர் மீது வழக்கு: 4 பேர் கைது
ADDED : அக் 31, 2025 12:32 AM
காரைக்குடி:  காரைக்குடியில் பா.ஜ.,  நிர்வாகியை கொலை செய்த வழக்கில், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பழனியப்பன் 34. சிவில் இன்ஜினியர். பா.ஜ., மாவட்ட இளைஞரணி நிர்வாகியான இவர்,   பொன்நகர் அருகே புதிதாக கட்டி வரும் கட்டடத்தை பார்வையிட்டார். அங்கு வந்த சிலர் ஆயுதங்களால் தாக்கியதில் அவர் இறந்தார்.
பழனியப்பனின் தாயார் அமுதா கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடினர். கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டமும் நடந்தது.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக  திருவேகம்பத்துாரை சேர்ந்த வாசு மகன் செல்வகுமார் 22,  வெள்ளைச்சாமி மகன் கோட்டை பாண்டி 22, கருப்பையா மகன் உதயநிதி 22, ஏரியூரைச் சேர்ந்த மாதேஸ்வரன் 19 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நேற்று காரைக்குடிநீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அவர்களை, காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்மேக கண்ணன் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

