/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் மீது வழக்கு
/
முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் மீது வழக்கு
ADDED : ஜூலை 30, 2025 10:00 PM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வருகையை முன்னிட்டு ஜூலை 26 முதல் அண்ணாதுரை சிலை அருகிலுள்ள கட்டடத்தின் மேல்மாடியில் முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் ஏற்பாட்டில் பலுான் பறக்க விடப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை என்று கூறி இந்த பலுான் அவிழ்க்கப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் பலுான் பறக்கவிடப்பட்டது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு பலுான் பறக்க அனுமதி இல்லை என்று பேரூராட்சி பணியாளர்கள் போலீசாருடன் வந்தனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் எதிர்ப்பு தெரிவித்தார். போலீசாருக்கும் உமாதேவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தெடார்ந்து உமாதேவன் மாடியில் இருந்து இறங்க மறுத்த நிலையில் போலீசார் அங்கேயே மாலை வரை காத்திருந்தனர். பின்னர் 6:30 மணிக்கு உமாதேவன் மாடியில் இருந்து இறங்கினார்.
அரசிடம் அனுமதியும் பெறாமல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி புகைப்படம் மற்றும் உமாதேவன் புகைப்படம் வைத்து ஹீலியம் காற்றால் நிரப்பப்பட்ட பலுானை அதிக உயரத்தில் பறக்க விட்ட காரணத்தால் திருப்புத்துார் நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.