ADDED : ஜன 19, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நாச்சாயி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேவகோட்டை ராம்நகர் தாணிச்சாவூரணி ரோட்டில் டாஸ்மாக் கடை துவக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருகில் பள்ளி, கோயில், குடியிருப்புகள் உள்ளன. மது அருந்துவோரால் இடையூறு ஏற்படும். கலெக்டருக்கு புகார் அனுப்பினோம். விதிகளை மீறி டாஸ்மாக் கடையை துவக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: மனுவை கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

