/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமத்தில் நுாலகம் அமைக்க வழக்கு
/
சாலைக்கிராமத்தில் நுாலகம் அமைக்க வழக்கு
ADDED : நவ 13, 2024 07:14 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமம் ராதாகிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சாலைக்கிராமத்தில் கிளை நுாலகம் 1965 லிருந்து செயல்படுகிறது. ஓடுகள் வேய்ந்த மேற்கூரையிலான அக்கட்டடம் பழுதடைந்துள்ளது. 17 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆறுபேர் மட்டுமே அமர்ந்து புத்தகங்களை வாசிக்க முடியும். இட நெருக்கடி உள்ளது. மாற்று இடம் தேர்வு செய்து புது கட்டடம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர், மாவட்ட நுாலக அலுவலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு வழக்கறிஞர்: மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: அதிகாரிகளிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் ஜன.21ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.