/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து இளையான்குடியில் வீணாகும் குடிநீர்

ADDED : அக் 27, 2025 04:16 AM
இளையான்குடி: இளையான்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் ரோட்டில் நீண்ட நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வருவதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளுக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் திட்ட குழாய்கள் பெரும்பாலும் சாலைகளை ஒட்டியே பதிக்கப்பட்டுள்ளதால் சாலை மேம்பாட்டு பணியின் போதும், அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் போதும் அழுத்தத்தின் காரணமாக குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
திருவுடையார்புரம் அருகே பீரம்மாள் தர்கா முன் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குழாய் உடைந்து அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் வீணாக சென்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.