/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி குண்டாறு திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்: திருப்புத்துாரில் பழனிசாமி உறுதி

ADDED : ஜூலை 29, 2025 11:16 PM

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தை செழிக்க வைக்க காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவோம், என திருப்புத்துாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க., ஆட்சியில் 14,400 கோடி மதிப்பில் காவிரி குண்டாறு திட்டம் கொண்டு வந்தோம். தி.மு.க., ஆட்சியில் கை விட்டு விவசாயிகளை வஞ்சித்து விட்டார்கள்.
இன்று மேட்டூர் அணை நிரம்பி 1லட்சத்து 26 ஆயிரம் கன அடிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இத்திட்டத்தின் மூலம் அரை டி.எம்.சி. நீர் சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைத்து கண்மாய்கள் நிரம்பியிருக்கும். நிலத்தடி நீரும் உயர்ந்திருக்கும்.
இந்த ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. கட்டுமானப்பொருட்கள் விலையும் அதிகரித்து விட்டது, என்றார்.
சிவகங்கையில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் சிவகங்கைக்கு கொண்டு வரவில்லை.
கருணாநிதி குடும்பத்தில் நான்கு அதிகார மையங்கள் இருப்பதால் எப்படி நாடு தாங்கும். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
சிறுமி முதல் பாட்டி வரை திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேயும் சூழல் உருவாகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லுாரி கூட கொண்டு வரவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கிற்கு மூடு விழா கண்டவர் ஸ்டாலின்.
மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஸ்டாலின் துடிக்கிறார். பாதுகாப்பு கொடுக்கக்கூடிய போலீசாரே மடப்புரம் காவலாளி அஜித்குமாரை கொலை செய்துள்ள னர்.
இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியில் தான் சிவகங்கை மாவட்டம் உருவானது. இவ்வாறு பேசினார்.