/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் கொலை வழக்கு சி.சி.டிவி., பதிவு சேகரிப்பில் சி.பி.ஐ., தீவிரம்
/
அஜித்குமார் கொலை வழக்கு சி.சி.டிவி., பதிவு சேகரிப்பில் சி.பி.ஐ., தீவிரம்
அஜித்குமார் கொலை வழக்கு சி.சி.டிவி., பதிவு சேகரிப்பில் சி.பி.ஐ., தீவிரம்
அஜித்குமார் கொலை வழக்கு சி.சி.டிவி., பதிவு சேகரிப்பில் சி.பி.ஐ., தீவிரம்
ADDED : ஜூலை 23, 2025 02:56 AM
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி அஜித்குமார் 29, கொலை வழக்கில் சி.சி.டிவி., பதிவுகளை சேகரிப்பதில் சி.பி.ஐ.,யினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் கோயில் வரை, திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற பாதையில் உள்ள சி.சி.டிவி., கேமராக்களில் ஜூன் 27 மற்றும் 28 ல் பதிவுகளை முதற்கட்டமாக சி.பி.ஐ.,யினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றின் பதிவு அழிந்திருந்தாலும் நவீன தொழில்நுட்பம் மூலம் சி.பி.ஐ.,யினர் சேகரித்துள்ளனர். ஒன்பது இடங்களில் உள்ள சி.சி.டி.வி., பதிவு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பக்தர் நிகிதா கார் வந்த நேரம், திரும்பி சென்ற நேரம், பார்க்கிங்கில் எவ்வளவு நேரம் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதே போல அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் வேன் எங்கு எங்கு சென்றது உள்ளிட்ட விபரங்களையும் சி.பி.ஐ.,யினர் சேகரித்து வருகின்றனர்.
சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான குழு சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ய, டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான குழு அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 27 கோயில் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்திக்ராஜாவை சி.பி.ஐ.,யினர் நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
ஜூன் 28 மாலை அஜித்குமார் அழைத்து செல்லப்பட்ட சிவகங்கை தனியார் மருத்துவமனை சி.சி.டிவி பதிவுகளையும் சி.பி.ஐ.,யினர் கைப்பற்றியுள்ளனர்.
நிகிதாவுக்கு நோட்டீஸ் அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ., போலீசார் புகார்தாரரான நிகிதாவிடம் விசாரிக்க மதுரை ஆத்திகுளம் சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.