/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநாடு
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநாடு
ADDED : டிச 08, 2024 06:19 AM
சிவகங்கை : சிவகங்கையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட மாநாடு நடந்தது. காளிமுத்து தலைமை வகித்தார். அன்பரசன் வரவேற்றார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் திரவியம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில துணைத்தலைவர் மிக்கேலம்மாள், தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வாசுகி, அரசு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப பணியாளர் சங்கம் முருகன், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் அப்துல் பாஷா பேசினர்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நிறைவு உரையாற்றினார்.
கூட்டத்தில் ஓய்வூதிய இயக்கத்தை மூடும் எண் 343 நிதித்துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.6,750 மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.