/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி., கேமரா
/
குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி., கேமரா
ADDED : நவ 29, 2024 05:45 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே கொட்டகுடி கிராமத்தில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி., கேமரா பொருத்தி ஊராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்கு போலீசாரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரும் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு அறிவுரை கூறுகின்றனர். இந்நிலையில் சிவகங்கை அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் 10 தெருக்கள் உள்ளது. நகரின் அருகாமையில் இருப்பதாலும் நகருக்குள் இருந்து எளிதாக கொட்டகுடி வழியாக மேலுார், மதுரை, திருப்புத்துார் பைபாஸ் ரோட்டை கடக்க முடியும் என்பதால் அதிகமாக வெளியூரை சேர்ந்தவர்கள் டூவீலரில் கொட்டகுடி கிராமத்தை கடந்து செல்கின்றனர்.
அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இந்த வழியாக செல்லாமல் இருக்கவும், குற்றங்களை தடுக்கவும் முக்கிய சந்திப்புகளில் 13 இடங்களில் சி.சி.டி.வி.,கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ஊராட்சி தலைவர் மகேந்திரன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமராஜர் காலனி பகுதியில் வீடுகளில் தொடர் திருட்டு நடந்தது. அதேபோல் நகர் பகுதியில் தொடர் வழிப்பறி கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தது. எங்கள் கிராமம் நகரின் மிக அருகாமையில் உள்ள பகுதி. நகரின் விரிவாக்க பகுதியாகவும் உள்ளது. அதிக மக்கள் எங்கள் ஊராட்சி பகுதியில் விரும்பி குடியேறி வருகின்றனர். கிராமத்திற்குள் வரும் வேறு நபர்களை கண்காணிக்கவும், குற்றங்களை தடுப்பதற்காகவும் கிராமத்தின் முக்கிய சந்திப்புகளில் கேமரா வைத்து கண்காணிக்கிறோம் என்றார்.