/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் வீடு அருகே 'சி.சி.டி.வி.,' பதிவுகள் ஆய்வு
/
அஜித்குமார் வீடு அருகே 'சி.சி.டி.வி.,' பதிவுகள் ஆய்வு
அஜித்குமார் வீடு அருகே 'சி.சி.டி.வி.,' பதிவுகள் ஆய்வு
அஜித்குமார் வீடு அருகே 'சி.சி.டி.வி.,' பதிவுகள் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2025 12:12 AM
திருப்புவனம்; அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரது வீடு அருகே உள்ள சி.சி.டி.வி, பதிவுகளை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக ஜூலை 12ம் தேதி முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 27 மற்றும் 28 தேதிகளில் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன், மெயின் ரோடு, மடப்புரம் விலக்கு, மடப்புரம் கோயில் வாகன பார்க்கிங், உதவி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து ஹார்ட் டிஸ்கில் பதிவான காட்சிகளை சேகரித்தனர்.
நேற்று மதியம் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மணி நேர விசாரணைக்கு பின் மடப்புரம் அஜித்குமார் வீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ஜூன் 27ம் தேதி அஜித்குமார் வீட்டில் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் யார் யார் வந்தனர், அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது யார் என சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து விசாரணை செய்கின்றனர்.
சி.சி.டி.வி., பதிவு ஆய்வின் போது அஜித்குமார் வழக்கறிஞர் கார்த்திகைராஜா, நவீன்குமார், நண்பர் வினோத் ஆகியோரை வைத்து விசாரிக்கின்றனர்.