/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கயிறு தொழில் மேம்பட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
கயிறு தொழில் மேம்பட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கயிறு தொழில் மேம்பட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கயிறு தொழில் மேம்பட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : டிச 23, 2024 05:10 AM

சிங்கம்புணரி பகுதியில் தென்னை மரங்கள் அதிகமுள்ள நிலையில் இப்பகுதியில் கயிறு உற்பத்தி தொழில் பிரபலம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலுகாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கயிறு தறிகள் செயல்பட்டன.
50 ஆயிரம் பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். குறிப்பாக பெண்கள் அதிகம் பயன் பெற்றனர்.
ஆனால் பல்வேறு காரணங்களால் இத்தொழில் நசிவடைந்து தற்போது 100 தறிகள் மட்டுமே செயல்படுகிறது.
இங்கிருந்து பல்வேறு வகையான கயிறுகள் தயாரித்து அனுப்பப்பட்ட நிலையில் தற்போது கட்டுமான தொழிலுக்கு பயன்படும் சாரக்கயிறுகள் மட்டுமே இத்தொழிலை காப்பாற்றி வருகிறது.
கயிறு தொழிலை மீட்க வேண்டும்
இது குறித்து சிங்கம்புணரி கயிறு உற்பத்தியாளர் கார்த்திகேயன் கூறியதாவது, ஒரு காலத்தில் சிங்கம்புணரியில் இருந்து அனைத்து மாநிலம், நாடுகளுக்கு ஏராளமான கயிறுகள் தினமும் லாரிகளில் அனுப்பப்பட்டது. பிளாஸ்டிக் கயிறுகள் வரவு, தேங்காய் நார் விலை உயர்வு, கயிறு விலை குறைவு, கூலி ஆட்கள் கிடைக்காதது போன்ற காரணத்தால் இத்தொழில் தற்போது நசிவடைந்துள்ளது. வேறு வேலை தெரியாத நிலையில், இத்தொழிலில் சிலர் மட்டும் ஈடுபட்டு வருகிறோம்.
பல்வேறு வகையான கயிறுகள் இங்கு தயாரிக்கப்படும். ஆனால் தற்போது கட்டுமான தொழிலுக்கு தேவைப்படும் சாரக்கயிறுகள் மட்டுமே அதிக அளவில் விற்கிறது. அதை மட்டுமே தயாரித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் கயிறு தொழில் மேம்பட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.