/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய அரசு சாதனை விளக்க கூட்டம் சிவகங்கை பா.ஜ., ஏற்பாடு
/
மத்திய அரசு சாதனை விளக்க கூட்டம் சிவகங்கை பா.ஜ., ஏற்பாடு
மத்திய அரசு சாதனை விளக்க கூட்டம் சிவகங்கை பா.ஜ., ஏற்பாடு
மத்திய அரசு சாதனை விளக்க கூட்டம் சிவகங்கை பா.ஜ., ஏற்பாடு
ADDED : டிச 25, 2025 05:35 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மண்டல் வாரியாக மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் நடத்தப்படும் என பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் மண்டல் வாரியாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்களை நடத்த வேண்டும். மண்டல் தலைவர்கள், பார்வையாளர்கள், ஒன்றிய தலைவர்கள் பங்கேற்க வேண்டும்.
காரைக்குடி தொகுதிக்கு முன்னாள் மாவட்ட பொது செயலாளர் ஏ.நாகராஜன், அரசு ஊழியர் பிரிவு மாநில செயலாளர் எஸ்.செல்வகணபதி, சிவகங்கை தொகுதிக்கு மாவட்ட பொது செயலாளர் ஆர்.கணேசன், முன்னாள் மாநில செயற்குழு வி.பாலமுருகன், மானாமதுரை தொகுதிக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜபிரதீப், நாகராஜன், திருப்புத்துார் தொகுதிக்கு மாவட்ட பொது செயலாளர் சுப்புக்காளை, ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் ரங்கசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள்.
இன்று முதல் (டிச., 25) மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்களை அந்தந்த மண்டல் வாரியாக நடத்திட வேண்டும் என்றார்.

