ADDED : அக் 23, 2025 12:38 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வயலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மறவமங்கலம் அருகேயுள்ள பரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரக்காளை மனைவி தேவி 60. இவர்கள் குடும்பத்துடன் மறவமங்கலத்தில் வசித்து வருகின்றனர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். நேற்று மறவமங்கலத்தில் இருந்து பரக்குளத்தில் உள்ள வயலை பார்க்க தேவி பஸ்சில் சென்றார்.
புல்லுக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி பரக்குளம் வயலுக்கு நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த 45 வயது மதிக்கதக்க ஆண், தேவி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். தேவி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
சிவகங்கை பகுதியில் தனியாக டூவீலரில் செல்பவர்களையும், பெண்களையும் குறிவைத்து வழிப்பறி சம்பவம் நடந்து வருகிறது.