ADDED : மே 16, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா 53. இவரது வீட்டிற்கு வந்த இரு பெண்கள், மிளகாய் பொடியை துாவி, 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் காரைக்குடி மேகலா 50, தேவகோட்டை நந்தினி 30 இருவரையும் கைது செய்தனர். நகையை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, காரைக்குடி மு.வி., தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் ஜானகி 62 என்ற மூதாட்டியிடம், பைக்கில் வந்த இருவர் பொருட்கள் வாங்குவது போல் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.