/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி விடுமுறையில் குழப்பம்: மழையில் நனைந்த மாணவர்கள்
/
பள்ளி விடுமுறையில் குழப்பம்: மழையில் நனைந்த மாணவர்கள்
பள்ளி விடுமுறையில் குழப்பம்: மழையில் நனைந்த மாணவர்கள்
பள்ளி விடுமுறையில் குழப்பம்: மழையில் நனைந்த மாணவர்கள்
ADDED : அக் 16, 2025 11:44 PM

மானாமதுரை: மானாமதுரையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடாததால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பமடைந்தனர்.
தமிழகத்தில் மழை காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் பெய்யும் மழை அளவை பொறுத்து மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் சிவகங்கை மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது. ஆனால் இதில் தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க முடியாமல் குழப்பம் நீடித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமாக பெய்து வருகிற நிலையில் மானாமதுரையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை விடாத காரணத்தினால் மழையில் நனைந்து கொண்டே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.