ADDED : பிப் 16, 2025 06:51 AM
திருப்புத்துார், : மத்திய கல்வி அமைச்சகம் நாட்டிலுள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவங்களுடன் இணைந்து ஸ்வயம் மற்றும் என்.பி.டி.இ.எல் அமைப்புகளின் மூலம் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான இணையவழி கல்வி வகுப்புகளை நடத்துகிறது.
மேலும் அதற்குரிய இணையவழி தேர்வுகள் நடத்தி சான்றிதழ்களை வழங்குகின்றது. மாநிலம் வாரியாக இவற்றிற்கென உள்ளூர் சாப்டர் கல்லூரிகளை ஸ்வயம் மற்றும் என்.பி.டி.இ.எல் அமைப்புகள் அங்கீகரித்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017 முதல் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் என்.பி.டி.இ.எல். இணையவழி கல்வி மூலம் மாணவர்கள் பலர் பலன் பெறுகின்றனர்.
இதனையடுத்து இக்கல்லுாரிக்கு சிறப்பாக செயல்படும் லோக்கல் சாப்டர் அங்கீகாரம் வழங்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
என்.பி.டி.இ.எல் ஒருங்கிணைப்பாளர் மின்னியல் துறைத்தலைவர் டி.திவ்யபிரசாத், ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் எஸ்.அம்மு ஆகியோரை கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன் பாராட்டினர்.

