ADDED : ஆக 16, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டை சகாய அன்னை சர்ச் நவநாள் திருவிழா நடந்தது.
தினமும் மாலை திருப்பலி, மறையுரை நிகழ்த்தினர். நிறைவு நாளன்று பாதிரியார் செங்கோல் தலைமையில் பாதிரியார்கள் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு சகாய அன்னை திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடந்தது.
வட்டார அதிபர் பங்கு பாதிரியார் அருள் சந்தியாகு, உதவி பங்கு பாதிரியார் பிலமோன் மற்றும் பங்கு பேரவையினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.