ADDED : ஏப் 27, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழா 9ம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் ரதத்தில் வலம் வந்தார்.
ஏப்.17ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் கொடியேற்றத்துடன் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் அலங்காரத்தில் அம்பாள் திருக்குளத்தை வலம் வந்தார்.
நேற்று இரவு 7:00 மணிக்கு உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் ரதத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களால் வடம் பிடித்து ரத ஊர்வலம் துவங்கியது.இன்று காலை 7:00 மணிக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டும், இரவு 7:00 மணிக்கு தெப்பத்திருவிழா, திருக்குள தீபவழிபாடும் நடைபெறும்.