/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் நாளை தேரோட்டம்
/
திருக்கோஷ்டியூரில் நாளை தேரோட்டம்
ADDED : ஜூலை 27, 2025 12:16 AM

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடக்கிறது.
இக்கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவம் ஜூலை19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி ஆண்டாளுடன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நேற்று இரவு ஆண்டாள்,பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.
இன்று காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், மாலை 4:00 மணிக்கு தேருக்கு தலை அலங்காரம் துவக்குதலும் நடைபெறும். இரவில் அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
நாளை, ஜூலை 28ல் ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும். காலை 9:37 மணிக்கு மேல் ஆண்டாள், சுவாமி தேரில் எழுந்தருளுகின்றனர்.
மதியம் 3:40 மணிக்கு மேல் 4:20 மணிக்குள் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும். ஜூலை 29 காலையில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி, ஆண்டாள் திருவீதி வலம் வந்து ஆஸ்தானம் எழந்தருளலும் நடைபெறும்.

