ADDED : அக் 16, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : அ.சிறுவயலில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் பங்கேற்றன.
நடுமாடு சிறிய மாடு என இரு பிரிவாக போட்டி நடந்தது. பெரியமாட்டில் 20 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டில் 54 ஜோடிகளும் கலந்து கொண்டன. மாட்டு வண்டி பந்தயத்தை தொடர்ந்து
குதிரை வண்டி பந்தயம் நடந்தது, வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.