
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா தேரோட்டம் நேற்று நடந்தது. ஜூலை 31 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
தினமும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளினார். ஆக.5 இரவு வீர அழகர், சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று மாலை 6:00 மணிக்கு தேருக்கு வீர அழகர் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு அலங்காரகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.