/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஷட்டர்கள் இல்லாத தடுப்பணைகள்: பலகைகளை பயன்படுத்தும் விவசாயிகள்
/
ஷட்டர்கள் இல்லாத தடுப்பணைகள்: பலகைகளை பயன்படுத்தும் விவசாயிகள்
ஷட்டர்கள் இல்லாத தடுப்பணைகள்: பலகைகளை பயன்படுத்தும் விவசாயிகள்
ஷட்டர்கள் இல்லாத தடுப்பணைகள்: பலகைகளை பயன்படுத்தும் விவசாயிகள்
ADDED : அக் 25, 2025 04:16 AM

இத்தாலுகாவில் மழைக்காலங்களில் உப்பாறு, பாலாறு, மணிமுத்தாறு என ஓடும் காட்டாறு தண்ணீரை நம்பி ஏராளமான பாசன கண்மாய்கள் உள்ளன. இந்த ஆறுகளில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பல இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள இரும்பு ஷட்டர்கள் பல இடங்களில் துருப்பிடித்து காணாமல் போய்விட்டது.
விவசாயிகள் தண்ணீரை தடுத்து கண்மாய்களுக்கு கொண்டு செல்ல முடியாமல்அவதிப்படுகின்றனர். தடுப்பணையை ஒட்டியுள்ள மதகுகள், பாசன கண்மாய் மடைகள் ஆகியவற்றிலும் ஷட்டர்கள் பழுதடைந்து பல இடங்களில் மராமத்து செய்யாமல் உள்ளன. கடந்தாண்டுகளில் மதகுகள் உடைந்து புதுக்கண்மாய் உள்ளிட்டவற்றில் தண்ணீர் வீணாகி வெளியேறிய நிலையில் அவை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் விரைவில் ஆறுகளில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால், தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்ல முடியுமா என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சுப.பார்த்திபன், விவசாயி, காளாப்பூர்; பாலாற்றில் காளாப்பூர் பகுதிக்கான தடுப்பணையின் இருபுறமும் தெற்கு கால்வாய், திருமாண்டான் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல 7 இரும்பு ஷட்டர்கள் இருந்தன. அனைத்தும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டது.
மூன்று ஆண்டுகளாக ஷட்டர் இல்லாமல் கம்புகளையும், மரப்பலகைகளையும் வைத்து தண்ணீரை சிரமப்பட்டு கொண்டு செல்கிறோம். அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் துயரத்தை அனுபவிக்கிறோம்.
ஷட்டர்கள் பழுதால் காளாப்பூர் பகுதிக்குட்பட்ட 70-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பாக உடனடியாக புதிய இரும்பு ஷட்டர்களை பொருத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும், என்றார்.

