/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
ADDED : அக் 25, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
மாநில தலைவர் முருகையன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் தமிழரசன், துணை பொது செயலாளர் ஜபருல்லா பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பிற சங்க நிர்வாகிகள் பேசினர். புதிய மாவட்ட தலைவராக பாலமுருகன், செயலாளர் வளன்அரசு, பொருளாளர் அசோக்குமார், துணை தலைவர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்தபூபாலன், நாகநாதன், புஷ்பவனம், சசிக்குமார், மாவட்ட இணை செயலாளர்கள் முருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

