/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடைக்காட்டூர் சர்ச் பணி ஆய்வு செய்த முதல்வர்
/
இடைக்காட்டூர் சர்ச் பணி ஆய்வு செய்த முதல்வர்
ADDED : அக் 04, 2025 03:44 AM
மானாமதுரை: இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச் பழமை வாய்ந்தது.
இந்த சர்ச்சில் தமிழக அரசு சார்பில் மராமத்து மற்றும் அருங்காட்சியம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுவதற்காக ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது ரூ.77.60 லட்சம் நிதி முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் இடைக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக கிராம மக்கள் மற்றும் சர்ச் நிர்வாகத்தினர் சார்பில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன்,தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, இனிகோ இருதயராஜ், முத்து ராமலிங்கம், காங்., பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கலெக்டர் பொற்கொடி, டி.ஆர்.ஓ., செல்வ சுரபி, ஆர்.டி.ஓ., ஜெபி கிரேசியா, சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம், இடைக்காட்டூர் சர்ச் பாதிரியார் ஜேம்ஸ் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.