/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ஆவினில் அல்வா மைசூர் பாகு விற்பனை
/
காரைக்குடி ஆவினில் அல்வா மைசூர் பாகு விற்பனை
ADDED : அக் 04, 2025 03:43 AM

காரைக்குடி: காரைக்குடி ஆவின் விற்பனையகங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி அல்வா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஆவின் நிறுவனம் தீபாவளிக்கு சிறப்பு இனிப்பு வகைகள் மற்றும் பால் பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது, ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து நெய் விலை லிட்டருக்கு ரூ.40 வரை குறைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி ஆவின் பாலகங்கள், சில்லரை விற்பனை நிலையங்களில் விதவிதமான ஆவின் இனிப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனம் மூலம் அந்தந்த பகுதிகளில் தயார் செய்யப்பட்ட திருநெல்வேலி அல்வா, திருச்சி மைசூர் பாகு, சென்னை குலாப் ஜாமுன், காரைக்குடி பால் அல்வா உள்ளிட்ட பல்வேறு இனிப்புகளும் பன்னீரும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இனிப்பு கால் கிலோ ரூ. 140 க்கு விற்பனை செய்யப்படுகிறது.