/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 15,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா ஜன.,22 முதல்வர் வழங்குகிறார்

ADDED : ஜன 11, 2025 01:44 AM
சிவகங்கை:சிவகங்கையில் ஜன., 22 ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில் 15,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ரூ.11 கோடியில் கட்டிய நவீன தமிழ் நுாலகம், அழகப்பா பல்கலையில் திருவள்ளுவர் சிலையை ஜன., 21 காலை 11:00 மணிக்கு முதல்வர் திறக்கிறார். அன்று மாலை 5:00 மணிக்கு பி.எல்.பி., மகாலில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அன்றிரவு காரைக்குடியில் தங்கும் அவர் ஜன., 22 காலை 9:00 மணிக்கு சிவகங்கை வருகிறார். அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்ட (வடக்கு திசை நோக்கிய மேடை) விழா மேடையில் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதில் 15,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா முதல்வர் வழங்குகிறார்.
நில நிர்வாக கமிஷனரின் கூட்டம்: இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்த ஆலோசனை கலெக்டர் அலுவலகத்தில் நில நிர்வாக கமிஷனர் பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஆர்.டி.ஓ., தாசில்தார், நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எந்தந்த தாலுகாவிற்கு எத்தனை இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது, அதற்கான இடம் தேர்வு குறித்த விபரங்களை கமிஷனர் விசாரித்தார்.