/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா பல்கலை.க்கு முதல்வர் வருகை
/
அழகப்பா பல்கலை.க்கு முதல்வர் வருகை
ADDED : ஜன 18, 2025 07:34 AM
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை.,க்கு ஜன.21ம் தேதி முதல்வர் ஸ்டாலின்வருவதை ஒட்டி நேற்று அமைச்சர்கள் கோவி. செழியன், பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் துணைவேந்தர் ரவி ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சார்பில் கட்டப்பட்ட ரூ.11 கோடி மதிப்பீட்டில் வளர்தமிழ் நுாலக திறப்பு விழா மற்றும் பல்கலை.,யில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
மேலும், பல்கலை., பட்டமளிப்பு வளாகத்தில்உள்ள கருத்தரங்கு கூடத்திற்கு வீறு கவியரசர் முடியரசனார் அரங்கம் என பெயர் சூட்ட உள்ளார். இதில் முதல்வர் ஸ்டாலின்கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நேற்று, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், பல்கலை., துணைவேந்தர் க.ரவி, மாங்குடி எம்.எல்.ஏ., தமிழரசி எம்.எல்.ஏ., மேயர் முத்துத்துரை உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜன.22ல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லுாரி மைதானத்தில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.