/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் அரிசி கடத்தலில் சிறுவர்கள்
/
ரேஷன் அரிசி கடத்தலில் சிறுவர்கள்
ADDED : மே 21, 2025 12:16 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் சிறுவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருப்புவனம் பகுதியில் ரேஷன் அரிசி டூவீலர்களில் மூடை மூடையாக கொண்டு வரப்பட்டு ஓரிடத்தில் சேமித்து வைத்து சரக்கு வாகனங்கள் முலம் மதுரைக்கு கடத்தப்படுகிறது. டூவீலர்களில் ரேஷன் அரிசி கடத்துவதற்கு சிறுவர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சிறுவர்களுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றனர்.
திருப்புவனத்தில் நேற்று மதியம் மாரியம்மன் கோயில் அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த சிறுவனை போலீசார் பிடித்தனர். சிறிது நேரத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் வந்து சிறுவனை மீட்டு சென்றார். ரேஷன் அரிசி கடத்தியவர் , சிறுவன் என யார் மீதும் வழக்கு பதியவில்லை.ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்யவில்லை.
தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.