/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடிக்கு செல்ல முடியாத குழந்தைகள்
/
அங்கன்வாடிக்கு செல்ல முடியாத குழந்தைகள்
ADDED : அக் 28, 2025 03:48 AM

காரைக்குடி: காரைக்குடி வைரவபுரத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவு வாயிலில், மழைநீர் தேங்கி சகதிக் காடாக காட்சி அளிப்பதால் மாணவர்கள் சிரமப் படுகின்றனர்.
காரைக்குடி சங்கரா புரம் பகுதிக்கு உட்பட்ட வைரவபுரத்தில் அங்கன்வாடி மையம் செயல் படுகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பணியாளர், உதவி யாளர் உள்ளனர். அரு கிலேயே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 25 மாணவர்களும், 2 ஆசிரியர்கள் உள்ளனர். 2 கட்டடமும் அருகருகே அமைந்து உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பள்ளி நுழைவுவாயில் முன்பு தண்ணீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கிறது.
பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்து வருவது குறித்து புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நுழைவு வாயிலை பயன்படுத்த முடியாமல் சுற்றி வர வேண்டி உள்ளது. அங்கன்வாடி மையம் பராமரிப்பின்றி புதர்ச் செடிகள் நிறைந்து கிடக்கிறது.

