/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் செல்வி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
/
திருக்கோஷ்டியூர் செல்வி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
திருக்கோஷ்டியூர் செல்வி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
திருக்கோஷ்டியூர் செல்வி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
ADDED : மே 01, 2025 06:17 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா பத்துநாட்கள் நடைபெறும். ஏப்.21 ல் காப்புக்கட்டி விழா துவங்கியது. தினசரி அம்மனுக்கு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஒன்பதாம் நாளை முன்னிட்டு காலை மூலவர் அமமனுக்கு அபிஷேகம் நடந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்ஸவர் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.
திருக்கோஷ்டியூர் மேலத்தெருவார் இசைவேளாளர் மற்றும் இளைஞர் மன்றம் சார்பில் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இரவில் அம்மன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கரகம் எடுத்தும், பெண்கள் நவ தானியங்கள் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்தும் மேள,வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.