/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED : மே 03, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. அதிகாலை 5:45 மணியளவில் சுவாமி அம்பாள் பூஜையை தொடர்ந்து திருவிழாவிற்கான கொடிகள் வீதி உலா வந்து கொடியேற்றம் நடந்தது.
கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. உற்ஸவ மூர்த்திகள் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், விநாயகர் முருகன் சண்டீகேசுவரர் அலங்காரம் செய்யப்பட்டு கேடகத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.