/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் வழிபாடு
/
கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் வழிபாடு
ADDED : நவ 02, 2025 10:31 PM

சிவகங்கை: கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, வழிபட்டனர்.
கிறிஸ்தவ மதத்தில் மறைந்த முன்னோர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் நவ. 2ம் தேதி கல்லறை திருநாள் நடைபெறுகிறது.
அந்நாட்களில் முன்னோர்கள் அடக்கம் செய்த கல்லறையை சுத்தம் செய்து, அதற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர். சிவகங்கையில், மானாமதுரை ரோட்டில்உள்ள கல்லறை தோட்டத்தில் மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கிறிஸ்தவர்கள் அனைவரும் முன்னோர்களை வழிபட்டனர். மானாமதுரை அருகே வே.மிக்கேல் பட்டிணத்தில் பாதிரியார் ஜேம்ஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தினர். காரைக்குடி அருகே கழனிவாசல், தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள கல்லறை தோட்டங்களில் முன்னோர்களை வழிபட்டு, சிறப்பு பிரார்த்னை செய்தனர்.

