ADDED : நவ 02, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடி அருகே சொட்டதட்டிக்கு செல்லும் வழியில் கரிச்சாவூரணியில் ரோட்டோரம் சிவகாமி 65, என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்த இரண்டு பேர் ரூ.100 கொடுத்து கடலை மிட்டாய் வாங்கியுள்ளனர்.
மீதி சில்லரை எடுத்து கொண்டிருந்த போது சிவகாமி கழுத்தில் கிடந்த 3.5 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

