/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கடத்தல் வழக்கு: காருடன் இருவர் கைது
/
திருப்புவனத்தில் கடத்தல் வழக்கு: காருடன் இருவர் கைது
திருப்புவனத்தில் கடத்தல் வழக்கு: காருடன் இருவர் கைது
திருப்புவனத்தில் கடத்தல் வழக்கு: காருடன் இருவர் கைது
ADDED : நவ 02, 2025 10:30 PM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் அக்.25ம் தேதி எலக்ட்ரீஷியனை கடத்திய வழக்கில் அறந்தாங்கியை சேர்ந்த 2 பேர்களை, கார்களுடன் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.
கீழராங்கியம் சிதம்பரம் 37. இன்வெர்ட்டர் பேட்டரி விற்பனை செய்து வருகிறார். குடும்பத்துடன் லாடனேந்தலில் வசிக்கிறார். அக்., 25 ம் தேதி லாடனேந்தலில் புதிதாக கட்டி வரும் வீட்டை மேற்பார்வையிடும் போது 2 கார்களில் வந்த 10 பேர்கள் கத்தி, அரிவாளுடன் வந்து, சிதம்பரத்தை காரில் கடத்தி சென்றனர். சிதம்பரம் மனைவி நிவேதா 31, திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் தேடுவதை அறிந்து, சிதம்பரத்தை அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷன் அருகே இறக்கிவிட்டு தப்பினர். போலீசார் விசாரணையில் அறந்தாங்கியை சேர்ந்த சேக்முகமது 31, க்கும் சிதம்பரத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், சேக்முகமதுவை, சிதம்பரம் ஏமாற்றியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமுற்ற சேக்முகமது ஆட்களுடன் வந்து அவரை கடத்தி சென்றுள்ளார். திருப்புவனம் போலீசார் கடத்தல் வழக்கில் சேக்முகமது, சக்திவேல் 50, ஆகிய இருவரையும் கைது செய்து, 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

