ADDED : டிச 24, 2024 04:46 AM

மானாமதுரை: மானாமதுரை குட்வில் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு தாளாளர்பூமிநாதன் தலைமை தாங்கி கவிதை, கதை,கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயங்களை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பங்கேற்றனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை முதல்வர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
காரைக்குடி: காரைக்குடி முத்துப்பட்டினம் வித்யாகிரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ஹேமமாலினி தலைமையேற்றார். காரைக்குடி டி.இ.எல்.சி., பாதிரியார் ஜோயல், காரைக்குடி பாதிரியார் ஸ்டீபன் மற்றும் ஆசிரியர் ஹென்றி பாஸ்கர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் சத்யா நன்றி கூறினார்.
காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பாதிரியார் ஸ்டீபன் கலந்து கொண்டார். எஸ்.எம்.எஸ்., பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியர் ஹென்றி பாஸ்கர், பள்ளி முதன்மை முதல்வர் நாராயணன், பள்ளி செயலாளர்கார்த்திக் முதல்வர் ராஜ்குமார் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். ஆசிரியை கலைவாணி நன்றி கூறினார்.
தேவகோட்டை: தேவகோட்டை முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது.
தாளாளர் கணேசன், பொருளாளர் பெர்டின் சேவியர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வீரதேவி கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியைகள் ஹரிவர்ஷினி, சரநிலா, ஜெபஸ்டின் சாய் சுசி ஒருங்கிணைத்தனர். ஆசிரியை சினேகா நன்றி கூறினார்.
* ஆனந்தா கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான் வசந்த் குமார் வரவேற்றார். துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கோபு முன்னிலை வகித்தனர். தேவகோட்டை ராம்நகர் லியோ குரு மட இயக்குநர் தாமஸ் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் பற்றி பேசினார்.பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் விக்டர்பென் வெண்ட்ராஜ் நன்றி கூறினார்.