நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது. தாளாளர் கணேசன், பொருளாளர் பெர்டின் சேவியர் முன்னிலை வகித்தனர். முதல்வர் வீர தேவி வரவேற்றார். ஆசிரியைகள் சரநிலா, லெவினா லிசி, சுதா விழாவை ஒருங்கிணைத்தனர்.
* ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி தாளாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் அம்பிகா வரவேற்றார். போதகர் துரைசிங், இந்திய குழந்தை சுவிசேஷ கூட்டுறவு இயக்குனர் நோபல்ராஜ், உறுப்பினர்கள் எபிநேசர், கிங்ஸிலி, கிங்ஸ்டன், தேவகோட்டை விபிஎஸ் இயக்குனர் தினகரன், கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினர். துணை முதல்வர் முருகன் பங்கேற்றார்.

