/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்களை அச்சுறுத்தும் 'குடி'மகன்கள்
/
பெண்களை அச்சுறுத்தும் 'குடி'மகன்கள்
ADDED : நவ 11, 2025 03:43 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடைபாதை, பிளாட்களை ஆக்கிரமித்து கொண்டு 'குடி'மகன்கள் மது அருந்துவதால் அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
இப்பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 8க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. அங்கு மதுபானங்களை வாங்கும் பல 'குடி'மகன்கள் அருகே பொதுமக்கள் செல்லும் பாதை, பிளாட்டுகள், வனப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வழியாக பெண்கள் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் உருவாகிறது. சில நேரங்களில் 'குடி'மகன்கள் மதுபோதையில் பெண்களை கேலி செய்வதும் தொடர்கிறது.
இதனால் அவ்வழியாக செல்வதையே பெண்கள் தவிர்த்து வருகின்றனர். வேங்கைப்பட்டி ரோட்டில் சேவுகமூர்த்தி நகர், செங்குண்டு ஊருணி, காசியாபிள்ளை நகர் வனப்பகுதி, கல்லம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
பல்வேறு போதை பொருட்களை உபயோகித்துவிட்டு அவர்களுக்குள் சண்டை நடப்பது தொடர்கிறது. எனவே இப்பகுதியில் போதை பொருள் பயன்படுத்துவதை தடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குடிமகன்களை அப்புறப்படுத்து அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

