/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துாய்மை பணியாளருக்கு அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்குக கலெக்டரிடம் சங்கத்தினர் புகார் மனு
/
துாய்மை பணியாளருக்கு அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்குக கலெக்டரிடம் சங்கத்தினர் புகார் மனு
துாய்மை பணியாளருக்கு அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்குக கலெக்டரிடம் சங்கத்தினர் புகார் மனு
துாய்மை பணியாளருக்கு அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்குக கலெக்டரிடம் சங்கத்தினர் புகார் மனு
ADDED : நவ 11, 2025 03:43 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளத்தை வழங்க கோரி, கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 445 கிராம ஊராட்சிகள் செயல்படுகின்றன. இக்கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை சேகரித்து, அகற்றுதல் மற்றும் சுத்திகரிப்பு செய்தல் பணிகளில் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் பணி நிரந்தரமாக 625 துாய்மை பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், இங்கு 177 துாய்மை பணியாளர்கள் காலிப்பணியிடமாக இருப்பதால், தினக்கூலி அடிப்படையில் துாய்மை பணியாளர்களை நியமித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மாவட்ட அளவில் 445 கிராம ஊராட்சிகளிலும் நிரந்தரமாக 451 துாய்மை பணியாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்கள் 2013 மே 7ம் தேதி முதல் சிறப்பு காலமுறை சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 55 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் மாத சம்பளமாக ரூ.9,890 வழங்க வேண்டும்.
ஆனால், ரூ.7,500 வரை மட்டுமே வழங்குகின்றனர். எனவே அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வின் நிலுவை தொகை வழங்க வேண்டும்.
2020 ஜன., 7ம் தேதி முதல் சிறப்பு காலமுறை சம்பளம் பெற்று வரும் துாய்மை பணியாளர்களுக்கு 55 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் மாத சம்பளம் ரூ.8,030 க்கு பதிலாக ரூ.6,000 மட்டுருமே வழங்குகின்றனர். அதே போன்று ஒவ்வொரு துாய்மை பணியாளருக்கும் 2017 அக்., 1 முதல் 2018 டிச., 31 வரை வழங்க வேண்டிய 7 வது சம்பள குழு நிலுவை தொகை ரூ.40,000யை வழங்க வேண்டும்.
2020 ஜன., 7 முதல் 2025 அக்., 30 வரை வழங்க வேண்டிய சம்பள நிலுவை தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.70,000 கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று துாய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி டிச.,4ல் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் கவனஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

