/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
/
சிவகங்கையில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு மாநில செயலாளர் உமாநாத், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் கர்ணன், ஆசிரியர் சங்கம் சகாயதைனேஷ் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் சேதுராமன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.