/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு துறையில் தனியார் மயத்தை கைவிட சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
/
அரசு துறையில் தனியார் மயத்தை கைவிட சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
அரசு துறையில் தனியார் மயத்தை கைவிட சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
அரசு துறையில் தனியார் மயத்தை கைவிட சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
ADDED : ஆக 17, 2025 11:09 PM
சிவகங்கை:''அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியத்தில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் ''என சிவகங்கையில் சி.ஐ.டி.யு., மாநில துணைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசு திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி, ஆசா, மக்களைத்தேடி மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும், நீதிமன்ற உத்தரவுப்படி, 480 நாட்கள் பணி முடித்த டாஸ்மாக், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
கட்டுமானம், ஆட்டோ, சாலையோர வியாபாரிகள், தையல், சுமை தொழிலாளர்களுக்கு வாரியத்தில் வழங்கும் பணப்பலனை உயர்த்தி தரவேண்டும். அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும். தமிழகத்தில் தாலுகாவுக்கு ஒரு சிப்காட் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 என நிர்ணயித்து ஒப்பந்தமுறையை கைவிட்டு அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றார்.