/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலத்தின் கீழ் தேங்கிய நீர் அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள்
/
பாலத்தின் கீழ் தேங்கிய நீர் அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள்
பாலத்தின் கீழ் தேங்கிய நீர் அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள்
பாலத்தின் கீழ் தேங்கிய நீர் அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள்
ADDED : அக் 23, 2025 04:19 AM

திருப்புவனம்: திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். பேரூராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் நகருக்குள் வர பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. திருப்புவனம் பைபாஸ் ரோட்டில்இருந்து நகருக்குள் வருவதற்கும், செல்வதற்கும் நான்கு வழிச்சாலையின் கீழே பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால் குகைப்பாலம் சரிவர அமைக்கப்படாததால் சிறிய மழைக்கு கூட பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த 93.60 மி.மீ., மழையால் பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகின.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்டோர் இயந்திரம் மூலம் வாய்க்கால் வெட்டி தண்ணீரை வெளியேற்றினர்.