/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டாக்டர்கள் இல்லாத நகர் நல மையம் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு
/
டாக்டர்கள் இல்லாத நகர் நல மையம் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு
டாக்டர்கள் இல்லாத நகர் நல மையம் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு
டாக்டர்கள் இல்லாத நகர் நல மையம் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு
ADDED : மே 15, 2025 04:58 AM
சிவகங்கை: சிவகங்கை எல்.ஐ.சி., அலுவலகம் எதிரே உள்ள நகர் நல மையத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மஜித்ரோட்டில் எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் உள்ளது நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. இங்கு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மட்டுமே டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர்.
மற்ற நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் நாய் கடி தடுப்பூசி, பாம்பு கடிக்கு விஷ முறிவு ஊசி அளிக்கப்படுகிறது. மாரடைப்பு முதலுதவி, அவசர மருத்துவ பெட்டகம் இங்கு உள்ளது. ஆனால் டாக்டர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற நேரங்களில் நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்கள் இல்லை. இங்கு வரக்கூடிய நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.
அதிகாலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்பவர்கள் காய்ச்சல் தலைவலி அல்லது ரத்த அழுத்தம், சர்க்கரை சம்பந்தமான பரிசோதனைக்கு வந்தால் மருத்துவமனையில் காலை 8:00 மணிக்கு டாக்டர்கள் இருப்பதில்லை . 24 மணி நேரமும் இயங்க கூடிய மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே டாக்டர்கள் இருப்பதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாவட்ட மருத்துவ துறை நிர்வாகம் நகர்புறங்களில் இயங்கக் கூடிய நகர் நல மையங்களில் 24 மணிநேரமும் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.