/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே மோதல்: 115 பேர் மீது வழக்குப்பதிவு.. தொடரும் பதட்டம்: போலீஸ் குவிப்பு
/
இளையான்குடி அருகே மோதல்: 115 பேர் மீது வழக்குப்பதிவு.. தொடரும் பதட்டம்: போலீஸ் குவிப்பு
இளையான்குடி அருகே மோதல்: 115 பேர் மீது வழக்குப்பதிவு.. தொடரும் பதட்டம்: போலீஸ் குவிப்பு
இளையான்குடி அருகே மோதல்: 115 பேர் மீது வழக்குப்பதிவு.. தொடரும் பதட்டம்: போலீஸ் குவிப்பு
ADDED : நவ 05, 2025 12:27 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே இளமனுார் பஸ் ஸ்டாப்பில் ஜாதி தலைவர்கள் போர்டு வைப்பதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த 115 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இளையான்குடி அருகே உள்ள இளமனுாரில் பஸ் ஸ்டாப் அருகில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது சமூகத்தைச் சேர்ந்த தலைவர் படத்துடன் கூடிய பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர்.
இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சமூகத்தினர் 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் புதிதாக தங்களது சமூகத்தை சேர்ந்த தலைவர் படத்துடன் கூடிய பிளக்ஸ் போர்டை வைத்த போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டை சேதப்படுத்திய போது ஏற்பட்ட மோதலில் புதிதாக பிளக்ஸ் போர்டு வைத்த சமூகத்தை சேர்ந்த 5 பேருக்கும், 2 போலீசாரும் காயமடைந்த நிலையில் அகற்றப்பட்ட பிளக்ஸ் போர்டுக்கு பதிலாக மீண்டும் அதே இடத்தில் புதிய பிளக்ஸ் போர்டை வைத்தனர்.
இதனால் இரு சமூகத்தினருடைய மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் சூழ்நிலையில் ஆங்காங்கே இரு சமூகத்தினரும் நேற்று முன்தினம் முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை முதல் சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அங்கிருந்து கிராம மக்கள் வெளியே கூட்டமாக செல்ல முடியாதவாறு காவல் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் இளமனுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த பெயர் தெரிந்த 65 பேர் மற்றும் 50 பேர் என மொத்தம் 115 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

