/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செம்மொழி நாள் விழா பேச்சு , கட்டுரை போட்டி பரிசளிப்பு
/
செம்மொழி நாள் விழா பேச்சு , கட்டுரை போட்டி பரிசளிப்பு
செம்மொழி நாள் விழா பேச்சு , கட்டுரை போட்டி பரிசளிப்பு
செம்மொழி நாள் விழா பேச்சு , கட்டுரை போட்டி பரிசளிப்பு
ADDED : மே 27, 2025 12:51 AM

சிவகங்கை: செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடத்திய பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஆர்.ஓ., செல்வசுரபி பரிசு , சான்றுகளை வழங்கினார்.
பள்ளி மாணவர் பேச்சு, கட்டுரை
பேச்சு போட்டிகளில் முதலிடம் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 மாணவி பி.தாட்சாயினி, இரண்டாம் பரிசு சிவகங்கை டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி பிளஸ்1 மாணவி கே.நவ்வி இளங்கொடி, மூன்றாம் பரிசு கோட்டையூர் சி.சி., அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவி ஆர்.அபிநயா பெற்றனர்.
கட்டுரை போட்டியில் முதலிடம் அரளிக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி 10ம் வகுப்பு மாணவி என்.ரசியாபானு, இரண்டாம் பரிசு சிவகங்கை டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.சாருமதி, மூன்றாம் இடம் சண்முகநாதபட்டினம் வி.என்.டி., அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவி பி.வைஷ்ணவி பெற்றனர்.
கல்லுாரி மாணவர் பேச்சு, கட்டுரை
பேச்சு போட்டியில் முதலிடம் புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லுாரி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு மாணவர் என்.முகம்மது கைப், இரண்டாம் இடம் காரைக்குடி அழகப்பா பல்கலை எம்.காம்., மாணவர் என்.நவீன், மூன்றாம் இடம் அழகப்பா பல்கலை பி.எட்., கல்லுாரி மாணவர் கே.லெனின் குமார் பெற்றனர். கட்டுரை போட்டியில் முதலிடம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி எம்.ஏ., தமிழ் வி.பவித்ரா, இரண்டாம் இடம் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி பி.ஏ., தமிழ் மாணவர் சி.ராஜபாரதி, மூன்றாம் இடம் அமராவதிபுதுார் ஸ்ரீராஜராஜன் பி.எட்., கல்லுாரி மாணவி எம்.ராமவள்ளி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசு தொகை ரூ.7,000, மூன்றாம் பரிசு தொகை ரூ.5,000 வீதம் வழங்கப்பட்டது. கலெக்டர் பி.ஏ., (நிலம்) கீர்த்தனா மணி, தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் உடனிருந்தனர்.