/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சின்னப்பன் வித்யாமந்திர் பள்ளியில் துாய்மை பணி
/
சின்னப்பன் வித்யாமந்திர் பள்ளியில் துாய்மை பணி
ADDED : ஜன 10, 2024 12:22 AM

தேவகோட்டை : தேவகோட்டை சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் எம் பள்ளி மிளிரும் பள்ளி என்ற பெயரில் பணி செய்யப்பட்டது.
அனைத்து மாணவர்களுடன், இளம் செஞ்சிலுவை சங்க மாணவ மாணவியர் சீருடையுடன், ஆசிரியர்கள் இணைந்து பணியை மேற்கொண்டனர். பல குழுக்களாக பிரிந்து தனது வகுப்பறைகளையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்திருக்க உறுதி பூண்டனர்.
பொருளாளர் பெர்டின் சேவியர் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி பணியை துவக்கி வைத்தார். தாளாளர் கணேசன், பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் மாணவர்களின் பணிகளை பாராட்டினர்.
முதல்வர் ரகுவீரன் தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

