/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு : 2594 பேருக்கு பதக்கம், சான்று
/
முதல்வர் கோப்பை விளையாட்டு : 2594 பேருக்கு பதக்கம், சான்று
முதல்வர் கோப்பை விளையாட்டு : 2594 பேருக்கு பதக்கம், சான்று
முதல்வர் கோப்பை விளையாட்டு : 2594 பேருக்கு பதக்கம், சான்று
ADDED : செப் 28, 2024 06:41 AM

சிவகங்கை, : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்கள் 2594 பேருக்கு பதக்கம், சான்றினை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் என 5 நிலைகளில் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் முதலிடத்தை பிடித்த 866, இரண்டு, மூன்றாம் இடம் பிடித்த தலா 864 பேர் என ஒட்டுமொத்தமாக 2594 பேர் பதக்கம், சான்றினை பெற்றனர்.
பரிசளிப்பு விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா வரவேற்றார்.
மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த 866 பேர், சென்னை, கோயம்புத்துார், மதுரை போன்ற நகரங்களில் நடைபெறும் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.