/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுப்பார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
/
விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுப்பார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுப்பார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுப்பார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
ADDED : ஆக 22, 2025 11:02 PM
சிவகங்கை:தமிழக தேர்தலில் த.வெ.க., விற்கு தி.மு.க., தான் எதிர்க்கட்சி என மதுரை மாநாட்டில் விஜய் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் தக்க பதிலடி கொடுப்பார் என சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கையில், மத்திய கூட்டுறவு வங்கிக்கான புதிய கட்டட பூமி பூஜை விழாவில் அவர் கூறியதாவது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக சொந்த கட்டடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநாட்டில் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என அழைப்பது குறித்து கேட்டதற்கு, அது விஜய் அவரின் விருப்பத்தை சொல்கிறார்.
அரசியல் எதிரி தி.மு.க.,தான் என விஜய் பேசியது குறித்த விளக்கத்தை விஜயிடம் தான் கேட்க வேண்டும். நேரடியாக தி.மு.க.,வோடு போட்டியிடுவது த.வெ.க.,தான் என விஜய் பேசியிருப்பதை பார்க்கும் போது, தி.மு.க.,வோடு போட்டியிட எங்களுக்கு தகுதியில்லையா என மற்ற கட்சிகள் தான் உணர்ச்சி வசப்பட்டு விஜயிடம் கேட்க வேண்டும்.
விஜய் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் அளிக்கக்கூடாது. முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுப்பார். வீடுகள் தோறும் ரேஷன் அரிசி வினியோகம் செய்வதற்காக விற்பனையாளருக்கு வண்டி வாடகை வழங்க மாநில அரசு ரூ.30.16 கோடி ஒதுக்கியுள்ளது. தரைப்பகுதி வீடுகளுக்கு கொண்டு செல்ல ஒரு கார்டுக்கு ரூ.40ம், மலைப்பகுதி வீட்டிற்கு செல்ல கார்டுக்கு ரூ.80 தரப்படும். விரைவில் விற்பனையாளர்களுக்கு வாடகை தொகை விடுவிக்கப்படும்.
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஸ்டாலின் தான் பதில் அளிப்பார். நாட்டின் உள்துறை, கூட்டுறவு துறை பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷாவே, தமிழக கூட்டுறவு துறை சிறப்பாக இருப்பதாக பாராட்டி, கடந்த ஆண்டு 5 விருதுகளை வழங்கியுள்ளார் என்றார்.