/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி கேந்திரிய வித்யாலயா சாதனை
/
முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி கேந்திரிய வித்யாலயா சாதனை
முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி கேந்திரிய வித்யாலயா சாதனை
முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி கேந்திரிய வித்யாலயா சாதனை
ADDED : செப் 21, 2024 05:31 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு திடலில் நடந்த முதல்வர் கோப்பை நீச்சல் போட்டியில் சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் 16 தங்கம், 6 வெள்ளி பதக்கம் பெற்றனர்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென நீச்சல் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மனோஜ்குமார் சர்மா, மாவட்ட நீச்சல் கழக தலைவர் ஜெயதாஸ் துவக்கி வைத்தனர்.
பயிற்சியாளர் திருபால் பாண்டித்துரை போட்டிகளை நடத்தினார். அனைத்து வகை நீச்சல் போட்டியில் சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் 16 தங்கம், 6 வெள்ளி பதக்கம் பெற்றனர்.
லாடனேந்தல் வேலம்மாள் பள்ளி 4 தங்கம், 3 வெள்ளி பதக்கம் பெற்றது. கல்லுாரி அளவிலான நீச்சல் போட்டியில் காரைக்குடி அழகப்பா கல்லுாரி மாணவர்கள் 20 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.
மாவட்ட அளவில் கல்லுாரி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி நடந்தது. இதில், முதலிடம் காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி, இரண்டாம் இடம் சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி, மூன்றாம் இடம் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி அணிகள் பெற்றன.