/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு பணியாளர்கள் 'ஸ்டிரைக்' 121 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடல்
/
கூட்டுறவு பணியாளர்கள் 'ஸ்டிரைக்' 121 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடல்
கூட்டுறவு பணியாளர்கள் 'ஸ்டிரைக்' 121 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடல்
கூட்டுறவு பணியாளர்கள் 'ஸ்டிரைக்' 121 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடல்
ADDED : அக் 22, 2024 04:59 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் 'ஸ்டிரைக்கால்' ரேஷன் பொருட்கள் வினியோகம், கூட்டுறவு கடன் சங்கத்தில் சேவை பாதித்துள்ளன.
கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளரின் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முதல் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
தீபாவளி காலத்தில் வேலை நிறுத்த அறிவிப்பால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்ட அளவில் முழு, பகுதி நேர கடைகள் என 855 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில், 553 விற்பனையாளர்கள், எடையாளர்கள் பணிபுரிகின்றனர்.
அதே போன்று விவசாயிகளுக்கு பயிர் கடன், உரம் வழங்குதல், நகை அடமானத்தின் பேரில் கடன் வழங்குதல் உள்ளிட்டவற்றிற்கு விவசாயிகள் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை நம்பியே உள்ளனர். இந்நிலையில் மாவட்ட அளவில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், 121 சங்கங்களில் செயலர், அலுவலர்கள் பணிக்கு செல்லாமல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பயிர் கடன், நகை அடமான கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணை பதிவாளர் நாகராஜன் கூறியதாவது: நேற்றைய நிலவரப்படி 553 ரேஷன் கடைகளில், 324 கடைகள் திறந்தும், 229 கடைகளை பூட்டி உள்ளனர். விற்பனையாளர்கள் 223 பேர் பணிக்கு வரவில்லை. அதே போன்று 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் 121 சங்கத்தில் செயலர், அலுவலர்கள் பணிக்கு வராததால், அச்சங்கங்கள் பூட்டப்பட்டுள்ளன. மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைப்பதை கண்காணித்து வருகிறோம், என்றனர்.